Ajith V. centiment! Predicted by those who love!!
The film's script for a movie in the cinema hittan oftentimes, atarkatuttatutta number of pictures in mind, the hero of the film's title and the name of the place. In that respect, Ajit V. centiment ஒர்க்அவுட்டாகியிருப்பத் in many cases, and now he will be a big hit film starring Valor predicted those who love her say that.
And they said about it, the English letter V Ajith films - began in vanmati Valley, several films, including history, he has been a big hit. As well as the brevity of the film's title V - Launching of the film was determined to win. Say.
And some, Ajith starrer Mankatha directed by Venkat Prabhu in his name Vinayak keraktarana. Vinayakan film is now kept as bravery. On account of the film's title, the names of Ajit V - city begins. Winning picture by double oh so right. Goal was simply to say.
Ajit who love predictions, whether centimentum Workout? 10 is coming - will be out on.
அஜீத்தின் வி செண்டிமென்ட்! அபிமானிகளின் ஆரூடம்!!13
சினிமாவில் ஒரு படம் ஹிட்டானால் அதன்பிறகு அந்த படத்தின் எழுத்து, நம்பர் ஆகியவற்றை மனதில் கொண்டே அதற்கடுத்தடுத்த படங்களின் டைட்டில் மற்றும் படத்தில் ஹீரோவின் பெயர் ஆகியவற்றை வைப்பார்கள். அந்த வகையில், அஜீத்துக்கு வி செண்டிமென்ட் பல சமயங்களில் ஒர்க்அவுட்டாகியிருப்பதால், தற்போது அவர் நடித்துள்ள வீரம் படமும் பெரிய ஹிட்டாக அமையும் என்று அவரது அபிமானிகள் ஆரூடம் சொல்கிறார்கள்.
அதுகுறித்து அவர்கள் கூறுகையில், அஜீத் நடித்த படங்களில் ஆங்கில எழுத்தான வி-யில் தொடங்கிய வான்மதி, வாலி, வரலாறு உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்திருக்கின்றன. அதேபோல் இந்த வீரம் படத்தின் டைட்டிலும் வி-யில் தொடங்குவதால் படம் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. என்கிறார்கள்.
இன்னும் சிலரோ, வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் அவரது கேரக்டரான பெயர் விநாயக். அதேபோல் இப்போது வீரம் படத்திலும் விநாயகம் என்று வைத்திருக்கிறார்கள். அந்த கணக்கில் பார்த்தால் இப்படத்தின் டைட்டிலும், அஜீத்தின் பெயருமே வி-யில்தான் ஆரம்பிக்கிறது. அதனால் படம் வெற்றி பெறுவது இப்போதே டபுள் ஓ.கே ஆகி விட்டது என்கிறார்கள்.
அஜீத் அபிமானிகள் ஆரூடமும், செண்டிமென்டும் ஒர்க்அவுட் ஆகுமா? என்பது வருகிற 10-ந்தேதி தெரிந்து விடும்.
0 comments